அமைச்சுக்களின் வேலைத்திட்டங்கள், மற்றும் செயற்படுத்துதல் தொடர்பிலும், அமைச்சுகளுக்குட்பட்ட திணைக்களங்களிலும், மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவினால் 10 முக்கிய அமைச்சுகளுக்குள் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
சில இராஜாங்க அமைச்சுக்களின் பொறுப்புகள், நேரடியாக அமைச்சுக்களின் கீழ் மாற்றப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் முகாமைத்துவ மாற்றங்களாகவே அமைந்துள்ளன. அமைச்சர்களோ, அமைச்சர்களின் பதவிகளிலோ எந்தவித மாற்றங்களும் இடம்பெறவில்லை.
இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ள அதி விஷேட வர்த்தமானி மூலம் இந்த விடயங்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார்.
