ஜனாதிபதி விசாரணை குழுவின் முன் ஆஜரானார் மனோ MP

ஜனாதிபதி விசாரணைக்குழுவின் விசாரணைக்காக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் சற்று முன்னர் சென்றுள்ளார். கொழும்பு பி.எம்.ஐ.சி,எச்சில் அமைந்துள்ள ஜனாதிபதி விசாரணைக்குழுவின் காரியாலயத்தில் தற்சமயம் விசாரணைகள் நடைபெறுவதாக அறியமுடிகிறது.

ஜனாதிபதி விசாரணைக்குழு மனோ MP இனை விசாரணைக்கு அழைத்த போது, தமிழில் அழைப்பாணை இல்லை என கூறி விசாரணைக்கு செல்ல மறுத்தார். பின்னர் தமிழில் விசாரணை அழைப்பு அனுப்பிய வேளையில் குறித்த தினத்தில் வர முடியாது என தெரிவித்தான் காரணமாக இன்றைய தினம் அவருக்கான விசாரணை தினம் வழங்கப்பட்டது.

கடந்த ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த காலத்தில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பில் விசாரணைக்கு அவர் அழைக்கப்பட்டுளார்.

ஜனாதிபதி விசாரணை குழுவின் முன் ஆஜரானார் மனோ MP
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version