கனேடிய பிரஜைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையில் சரிவடைந்து வரும் பொருளாதார நிலைமை தொடர்பில் கனடா இலங்கையிலுள்ள அந்நாட்டு பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடி, அடிப்படை தேவைகளின் பற்றாக்குறையை நோக்கி நகர்வதாக கனடா அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதற்கமைய மருந்துப்பொருட்கள், எரிபொருள் மற்றும் உணவு என்பன இதில் உள்ளடங்குவதாகவும் பொருளாதார ஸ்திரத்தன்மை, சுகாதாரம் உள்ளிட்ட பொதுச்சேவைகளையும் இது பாதிக்கும் எனவும் கனேடிய பிரஜைகளுக்கு அந்நாட்டு அரசாங்கம் எச்சரித்துள்ளது.

எனவே, உணவு, நீர் மற்றும் எரிபொருளை கையிருப்பில் வைத்துக்கொள்ளுமாறு அவர்களை அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை உணவு மற்றும் எரிபொருள் பற்றாக்குறை தொடர்பிலான தகவல்களை உள்நாட்டு ஊடகங்கள் வாயிலாக அறிந்துகொள்ளுமாறும் இலங்கையிலுள்ள கனேடிய பிரஜைகளை அந்நாட்டு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.

கனேடிய பிரஜைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version