கர்தினாலுக்கு பொலிஸ்மா அதிபர் பதவியா?

நாட்டின் பொலிஸ்மா அதிபர் பதவியை, கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் வழங்க வேண்டுமென ‘ஒரே நாடு; ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

பதுளையில் நேற்று (15/01) ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.

அதுபற்றி அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், “கர்தினாலின் சில செயற்பாடுகளை பார்க்கும் போது அவர் அதிகாரபூர்வமற்ற பொலிஸ்மா அதிபராக செயற்படுவதாகவே தெரிகிறது.

பொரளை தேவாலயத்தில் கைக்குண்டு வைக்கப்பட்ட சம்பவம் ஓர் சாதாரண விடயம் அல்ல, இந்த நாட்டில் விசாரணைகளை நடாத்துவதற்கு முறையொன்று காணப்படுகிறது.

கர்தினால் தனது சமூகத்தின் சார்பில் குரல் கொடுக்க வேண்டும் என்பதில் பிரச்சினையில்லை. ஆனால் அவர் பொலிஸ்மா அதிபரை விமர்சனம் செய்திருந்தார்.

அவ்வாறானால் பொலிஸ்மா அதிபர் பதவியை ஜனாதிபதி கர்தினாலுக்கு வழங்குவதே பொருத்தமானது” என ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

கர்தினாலுக்கு பொலிஸ்மா அதிபர் பதவியா?
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version