நுவெரெலியா பொங்கல் விழா

நுவரெலியா – சினிசிட்டா மைதானத்தில் நடைபெற்ற இந்த பொங்கல் நிகழ்வில்  எதிர்கட்சி தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ, இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே கலந்து கொண்டதுடன்தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி, தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர்பழனி திகாம்பரம் எம்.பி, மலையக மக்கள் முன்னணியின் தலைவர் இராதாகிருஷ்ணன் எம்.பி மற்றும்பாராளுமன்ற உறுப்பினர் உதயக்குமார், ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி பாராளுமன்ற உறுப்பினர் ஹேசவிதான ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய இந்திய உயர் ஸ்தானிகர் “நான்காவது கட்டமாக 10,000 வீடுகள் கட்டும் திட்டம்மலையகத்தில் விரைவில் ஆரம்பிக்கப்படுமென இந்திய உயர்ஸதானிகர் தெரிவித்தார். இந்தியாவுக்கும்இலங்கைக்குமான தொப்புள் கொடி உறவு தொடருமெனவும், மலையகத்தில் வாழும் இந்திய வம்சாவழிமக்களை பாரத தாய் ஒருபோதும் கைவிடமாட்டாள் எனவும் அபிவிருத்தி திட்டங்களுக்கு தொடர்ந்தும் இந்தியாபைகொடுக்குமென மேலும் தெரிவித்தார். 

ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்து தான் ஜனாதிபதி பொறுப்பையேற்றதும் தேயிலைதொழிற்சலைகளுக்கான ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்கப்படும் எனவும் அதன் மூலம் சகல தொழிலாளர்பிரச்சினைகளும் தீர்க்கப்படுமென எதிர்கட்சி தலைவர, பாராளுமன்ன உறுப்பினர் சஜித் பிரேமதாசதனதுரையில் தெரிவித்தார். 

தான் இனவாத்த்துக்கோ, அடிப்படைவாத்த்துக்கோ பயந்தவனில்லை. தற்போதைய அரசினால்மேற்கொள்ளப்படும் அவ்வாறன நடவடிக்கைகளை முறியடித்து

சகல இன மக்களும் இணைந்து அமைதியாக சந்தோசமாக இந்த நாட்டில் வாழ, நாட்டை பாதுகாக்க வழிசெய்து கொடுப்பேன் என தெரிவித்த சஜித் பிரேமதாச மலையகத்திலும், இலங்கை பூராகவும் தொழில்நுட்பகல்வியினை அனைத்து மாணவர்களும் கற்பதற்கான திட்டங்கள் மற்றும் சுகாதார தேவைகளுக்கானஅத்தியாவசிய பொருட்களை வைத்தியசாலைக்கு வழங்கியுள்ளோம். எதிர்கட்சியாக இருந்து கொண்டே செய்யஆரம்பித்துவிட்டோம் எனவும் தெரிவித்த அவர், ஆட்சிக்கு வந்ததும் இன்னமும் பல திட்டங்களைசெயற்படுத்துவோம் எனவும் தனதுரையில் கூறினார். 

இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடனில்லாமல் நன்கொடையாக வீடுகள் அமைக்க தமது ஆட்சியின் போது நிதியை வழங்கியதாகவும், அதனை மீண்டும் ஆட்சிக்கும் வந்ததும் செய்வோம் எனவும் எதிர்கட்சி தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாச தனது உரையில் தெரிவித்தார். 

நான்காவது நாளான இன்றைய காணும் பொங்கலில் இந்திய மலையக மக்களை காண்பதற்காக வருகை தந்த எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, இந்திய உயர் ஸ்தானிகர் ஆகியோர் நுவரெலியாவுக்கு வந்து மக்களைபார்வையிட்டு சென்றுள்ளனர். போகி பண்டிகையில் பழையனவற்றை தூக்கியெறிவது போன்று இந்த அரசையும்தூக்கியெறியவேண்டுமென தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தனது உரையில் தெரிவித்தார்.

“இந்திய உயர் ஸதானிகர் கோபால் பாக்லே கூறியது போல பாரத தாயின் பிள்ளைகளான நாங்கள் சண்டையிட்டு, பிடிவாதம் பிடித்து வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற செய்வோம். அதேபோன்று சஜித் பிரேமதாச மலையக மக்களுக்கான நிலவுரிமையை வழங்குவதாக உறுதிமொழி வழங்கியுள்ளார். எழுதி வைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் வழங்கிய வாக்குறுதிகளை நாம் பின் தொடர்ந்து நிறைவேற்ற செய்வோம்” என மனோ MP தனதுரையில் தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் ஏராளமான மக்கள் கலந்து கொணரடிருநழதனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version