அரச நிறுவனங்களிடம் விடுக்கப்பட்ட அவசர கோரிக்கை

நாடளாவிய ரீதியில் செயற்படும் அனைத்து அமைச்சுகள் மற்றும் அரச நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் காணிகள், வாகனங்கள் மற்றும் கட்டடங்கள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு நிதியமைச்சினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சின் கட்டுப்பாட்டாளர் நாயகம் கே.ஏ.ரம்யா காந்தி இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

அரச நிறுவனங்களுக்குச் சொந்தமான பெரும்பாலான காணிகள் அங்கீகாரமற்ற ஆக்கிரமிப்பாளர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சகல அரச நிறுவனங்களும் ஏப்ரல் 15 ஆம் திகதிக்கு முன்னர் ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அரச நிறுவனங்களிடம் விடுக்கப்பட்ட அவசர கோரிக்கை
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version