ஐக்கிய மக்கள் சக்த்தியின் கூட்டணி கட்சியான தமிழ் முற்போக்கு கூட்டணி ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட தேசிய அரசாங்க அமைச்சரவை அழைப்பை நிராகரிப்பதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் வி மீடியாவுக்கு தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியி, தமிழ் முற்போக்கு கூட்டணி, அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஜனாதிபதியின் இந்த அழைப்பை முழுமையாக புறக்கணிப்பதாகவும், நீண்டகால, குறுங்கால எந்த ஆட்சிகளிலும் பங்கெடுப்பது தொடர்பில் சிந்தித்து பார்ப்பது கூடவில்லையென முடிவெடுத்துள்ளதாகவும் மனோ MP தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் பங்காளி கட்சிகளுக்கிடையிலான கலந்துரையாடல் இன்று(04.04) நடைபெற்றதாகவும், அதன்போது இந்த விடயங்கள் பேசப்பட்டதாகவும் தெரிவித்த மனோ கணேசன், நாளைய தினம் பாராளுமன்ற அமர்வு எதிர்கட்சியினரால் முடக்கப்படுமெனவும் தெரிவித்தார். ஜனாதிபதி இன்று காலை சகல கட்சிகளுக்கும் இடைக்கால அமைச்சரவை அமைப்பதில் பங்குபற்றுமாறு அழைப்பு விடுத்திருந்தார். இருப்பினும் ஆளும் கூட்டணியிலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, இன்று தாம் அரசிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. ஜே.வி.பி அழைப்பை மறுத்து ஜனாதிபதி பதவி விலகவேண்டுமென அறிவித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி தாம் நிராகரிப்பதாக அறிவித்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பும் தாம் அந்த அழைப்பை நிராகரிப்பதாக அறிவித்துள்ளது.
செய்திகள்
அரசிலிருந்து விலகியது சுதந்திர கட்சி
அரசிலிருந்து ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி விலகியுள்ளதாக அறிவித்துள்ளது. நாளைய(05.04) பாராளுமன்ற அமர்வில் தமது 14 பாராளுமன்ற உறுப்பினர்களும் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக அந்த…
ஜனாதிபதியின் அழைப்பு நிராகரிப்பு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சகல கட்சிகளையும் அமைச்சரவையில் பங்குபற்றுமாறு இன்று (04.04) அழைப்பு விடுத்திருந்தார். நாட்டின் தற்போதைய மோசமான நிலைமையினை சீர்…
தங்கல்லையில் பாரிய போராட்டம் – பொலிஸார் தாக்குதல்
ஹம்பாந்தோட்டை, தங்கல்லையில் அமைந்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டின் முன்றலில் நடைபெறும் பாரிய போராட்டத்தின் மீது காவற்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை…
அரசிலிருந்து சுதந்திர கட்சி வெளியேறுகிறதா?
ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்திலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி விலகும் நிலை ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இடைக்கால அமைச்சர்களது நியமனம்…
ஜனாதிபதி மகன் வீட்டுக்கு முன்னாள் போராட்டம்
அமெரிக்காவில் வசிக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மகன் மனோஜ் ராஜபக்ஷ வீட்டின் முன்னதாக போராட்டங்கள் இடம்பெற்றுளளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மக்கள் வீட்டின்…
தொடரும் பதவி விலகல்
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தனது பதவி விலகளுக்கான கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளித்துளார். நேற்று(03.04)…
இடைக்கால அமைச்சரவை
இடைக்கால அமைச்சரவை ஒன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளது. நான்கு அமைச்சர்களுக்கு ஜனாதிபதியினால் பதவி பிராமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. தேசிய அரசுக்கான…
தேசிய அரசாங்கத்துக்கு அழைப்பு
நாட்டில் ஏற்பட்டுள்ள தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொண்டு ஒன்றிணையுமாறு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள தேசிய நெருக்கடிக்குத் தீர்வு காண ஒன்றிணையுமாறு, அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பொருளாதார மற்றும் உலகளாவிய காரணிகளால் தற்போதைய நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. ஆசியாவின் முன்னணி ஜனநாயக நாடுகளில் ஒன்றாக, ஜனநாயக கட்டமைப்பிற்குள்ளேயே இதற்கு தீர்வு காணப்பட வேண்டி உள்ளது. அனைத்து குடிமக்கள் மற்றும் எதிர்கால சந்ததியினருக்காக, தேசிய தேவை எனக் கருதி ஒன்றிணைந்து செயற்பட வேண்டியுள்ளது. அதற்காக அமைச்சுப் பதவிகளை ஏற்றுக் கொண்டு, தேசிய நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கு ஒன்றிணையுமாறு, பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஜனாதிபதி அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.
பசிலுக்கு அமைச்சு பதவியில்லை
முன்னாள் நிதியமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷவுக்கு புதிய அமைச்சரவையில் அமைச்சு பதவிகள் வழங்கப்படமாட்டதென ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. உள்ளக…