இலங்கையின் மதுபானம் (அரக்) , தென்னங்கள்ளு, பனங்கள்ளு போன்ற மதுபானங்கள், 35 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
2021ம் ஆண்டு இலங்கை மதுபானங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து 20 மில்லியன் டொலர்களை நாட்டுக்காக பெற்றுக்கொடுத்துளோம், மேலும் 2022ம் ஆண்டு 21 மில்லியன் டொலர்களை ஈட்டியுள்ளோம்.
எமது நாட்டின் மதுபானம் (அரக்), தென்னங்கள்ளு, பனங்கள்ளு போன்ற மதுபானங்களுக்கு வெளிநாடுகளில் அதிக கேள்வி இருப்பதாகவும், இவற்றை ஏற்றுமதி செய்வதால் நாட்டுக்கு அதிக லாபம் ஈட்ட முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.