இலங்கையர்களுக்கு, இஸ்ரேலில் 2000 தாதியர் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்க தயார் என இலங்கை வந்துள்ள விசேட பிரதிநிதிகள் குழு உறுதிப்படுத்தியுள்ளது.
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இஷேரயேல் குழு இதனை தெரிவித்துள்ளது.
இஸ்ரயேலில் தாதியர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள் உள்ளதாக, அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த வேலை வாய்ப்பை பெற்றுக்கொடுப்பதற்காக இடைத்தரகர்கள் பணம் பெற்றால், அவை தொடர்பான அனைத்து தகவல்களையும் தங்களுக்கு வழங்குமாறு அந்நாட்டின் மக்கள் தொகை மற்றும் இடம்பெயர்வு அமைப்பின் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.