இலங்கைக்கான விமான சேவையை மீண்டும் ஆரம்பித்த “ஏர் சைனா” !

கொரோனா பரவலுக்கு பின்னர் சீன விமான நிறுவனமான “ஏர் சைனா” மீண்டும் இலங்கைக்கான விமான சேவைகளை ஆரம்பித்துள்ளது.

சேவையை மீள ஆரம்பிதற்கு பின்னரான முதல் விமானம் நேற்று (03.07) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள செங்டு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சீனா ஏர்லைன்ஸ் விமானம் CCA-425 நேற்று இரவு 08.20 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

சுமார் மூன்று வருடங்களுக்கு முன்னர், இந்த சீன விமான நிறுவனம் இலங்கைக்கான விமானங்களை தற்காலிகமாக நிறுத்தியதுடன், நேற்று முதல் மீண்டும் ஆரம்பித்துள்ளது.

இந்த “Air China” விமான சேவையானது வாராந்தம் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சீனாவின் செங்டுவில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி புறப்படவுள்ளது.

இந்த முதலாவது விமானத்தை வரவேற்க இலங்கைக்கான சீனத் தூதுவர் Xi Shenhong, Chinese National Airlines Asia Pacific Regional Manager Shui Jun ஆகியோர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தனர்.

Social Share

Leave a Reply