தரமற்ற மருந்தின் காரணமாக பெருமளவிலான நோயாளர்கள், கண் சத்திரசிகிச்சையின் பின்னர் பார்வையை இழந்துள்ள நிலையில், இது தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளுக்கு எதிராகவே வைத்தியர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு உட்பட பல அமைப்புக்கள் மேற்படி முறைப்பாடு செய்துள்ளன.
நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாடு காரணமாக, தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபையில் பதிவு செய்யப்படாத நிறுவனங்களின் ஊடாக மயக்க ஊசி மற்றும் ஏனைய வகை மருந்துகள் இலங்கைக்கு கொண்டு வரப்படுவதாகவும், கணிசமான நோயாளிகள் நாடு முழுவதும் உள்ள பல மருத்துவமனைகளில் இறந்து பார்வையற்றவர்களாக மாறியுள்ளனர் எனவும் குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கண் வைத்தியசாலை, நுவரெலியா வைத்தியசாலை உள்ளிட்ட பல வைத்தியசாலைகளில் கண் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பல நோயாளர்கள் பார்வையிழந்துள்ளதாக ஏற்கனவே உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தரமற்ற மயக்க ஊசியால் பலர் உயிரிழந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.