பாராளுமன்றத்தில் அமளிதுமளி!

மாத்தளை அல்கடுவ பிரதேசத்தில் 03 தோட்ட குடும்பங்களை வெளியேற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பாராளுமன்றத்தில் எதிர்ப்பு பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பாராளுமன்ற அவையின் நடுப்பகுதிக்கு வந்த பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மாத்தளை – ரத்வத்த தோட்ட முகாமையாளரை கைது செய்யுமாறு கோரி குறித்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

தோட்டத்தில் வசிக்கும் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 14 பேரை பலவந்தமாக வெளியேற்றி, அவர்களது வீட்டை இடித்து அதன் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக முகாமையாளர் மீது குற்றம் சுமத்தப்பட்டதுடன், அவருக்கும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கும் இடையில் அண்மையில் வாக்குவாதம் ஏற்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே இன்று பாராளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

Social Share

Leave a Reply