உலக தமிழர் பேரவை போன்ற அமைப்புகளுடன் இணைந்து தமிழ் அரசியலை ஒற்றையாட்சிக்குள் முடக்குவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முயற்சிப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சுமத்தியுள்ளார்.
மட்டக்களப்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், குறித்த செயற்பாட்டுக்கு தாம் ஒருபோதும் இடமளிக்க போவதில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டுள்ளார்.