2024ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டு முதல் பெறுமதி சேர் வரியினை 18 சதவீதமாக அதிகரித்ததன் பின்னர், லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை கணிசமாக உயர்வடையும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
வரி அதிகரிக்கப்படுவதால் எரிவாயுவின் விலை அதிகரிக்க வேண்டிய நிலைமை ஏற்படும் எனவும் அவர் குறிபிட்டுள்ளார்.
இதற்கமைய தற்போது மூவாயிரத்து 565 ரூபாவாக காணப்படும் 12.5 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 18 சதவீத வட் வரி சேர்க்கப்பட்டால் 640 ரூபாவினால் எரிவாயு சிலிணடரின் விலை அதிகரிக்கப்படலாம் எனவும் லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.