யாழ்ப்பாணம், டெல்ஃப்ட் தீவு பகுதியில் வடக்கடலில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 6 இந்திய மீனவர்கள் இரண்டு இந்திய மீன்பிடி படகுகளுடன் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட இரண்டு இந்திய மீன்பிடி படகுகளும், படகில் இருந்த ஆறு இந்திய மீனவர்களும் காங்கேசன்துறை துறைமுகத்திற்குச் செல்லப்பட்டதுடன், மேலதிக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.