இலங்கை கல்வி முறைமையில் புதிய மாற்றம்..

AI தொழில்நுட்பம் தொடர்பான பாடத்திட்டங்களை இலங்கை கல்வி முறைமையில் அறிமுகப்படுத்துவதற்கான திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில்,  AI தொழில்நுட்பம் தொடர்பான தேசிய உத்தி மற்றும் திட்டம் உருவாக்க குழுவினால் வழங்கப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில் கல்வி முறைமையில்  AI தொழில்நுட்ப பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்துவது பொருத்தமானது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மூலோபாயத் திட்டத்தின் ஒரு பகுதியாக, பொதுக் கல்வியில்  AI தொழில்நுட்ப பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கான ஆரம்ப திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் மைக்ரோசாப்ட் (Microsoft) நிறுவனத்தின் ஆதரவுடன் செயற்படுத்தப்படவுள்ளது. 

Social Share

Leave a Reply