குவைத் நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தில் வண்ணங்களின் பண்டிகையான
ஹோலி பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.
இந்த ஹோலி பண்டிகையையொட்டி ஒருவருக்கொருவர் வண்ணம் தீட்டி
தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மேலும், இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்நிகழ்வில் இந்திய தூதரக அதிகாரிகள் உள்ளிட்ட இந்திய சமூகத்தினர் பலர்
கலந்து கொண்டனர்.