இஸ்ரேல் பிரதமர், ஹமாஸ் தலைவர் உள்ளிட்டோருக்கு பிடியாணை பிறப்பிக்குமாறு கோரிக்கை

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோசவ் கல்லன்ட், ஹமாஸ் அமைப்பின் தலைவர் யஹ்யா சின்வார் மற்றும் ஹமாஸ் அமைப்பின் முக்கிய
தலைமைகள் சிலருக்கு எதிராக போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் சட்டத்தரணி கரீம் ஏஏ கான் கே சிபிடியாணை பிறப்பிக்கப்பட வேண்டும் என கோரி
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

அனைத்து மனிதர்களின் உயிர்களும் சமம் என்பதை உறுதிப்படுத்துவதற்காக
இந்த கோரிக்கை விடுக்கப்பட்டதாக சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு அவர்கள் பொறுப்பேற்பார்கள் என நம்புவதற்கு நியாயமான காரணங்கள் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் நெதன்யாகு தனக்கு எதிரான சட்டத்தரணியின் குற்றச்சாட்டுகளை “அவமானம்” என்று கூறியுள்ளார்.

சட்டத்தரணியின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் கண்டம் வெளியிட்டுள்ளார்.
மேலும் மூர்க்கத்தனமான செயல் என்றும் விமர்சித்துள்ளார்.

Social Share

Leave a Reply