நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாடாளுமன்றத்தில் இன்று (04.06) கருத்து தெரிவித்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் இதனை தெரிவித்துள்ளார்.
சீரற்ற வானிலை காரணமாக 41 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
அத்துடன், 23 மாவட்டங்களின் 262 பிரதேச செயலகப் பிரிவுகளில் 33,422 குடும்பங்களைச் சேர்ந்த 130,021 பேர் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அந்த பிரதேசங்களில் அரசாங்கத்தால் நடத்தப்படும் 116 பாதுகாப்பு நிலையங்களில் 2,368 குடும்பங்களைச் சேர்ந்த 9,248 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.