திருக்கோணேச்சரத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு யாசகர்கள் இடையூறு

திருகோணமலையில் அமையப்பெற்றுள்ள பிரசித்திப் பெற்ற திருக்கோணேச்சரம் கோயிலுக்கு வருகைத்தரும்
சுற்றுலா பயணிகளையும், பொதுமக்களையும் அசௌகரியப்படுத்தும் யாசகர்கள், ஊதுபத்தி விற்கும் பெண்கள்
தொடர்பாக பொறுப்பு வாய்ந்தவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாளாந்தம் பெருமளவு பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நிலையில் யாசகர்கள்,ஊதுபத்தி விற்போர் மற்றும் கைசாத்திரம் பார்ப்போர்
அவர்களுக்கு இடையூறு விளைவித்து வருவதாக சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

இவ்வாறான செயல்களில் ஈடுபடுவோர் பொதுமக்களை அவதுாறாக பேசுவதுடன்,
வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் உடலை தொடுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகின்றனர்.

இவ்வாறான செயற்பாடுகளால் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவடையும் அபாயம் காணப்படுகின்றது.

இலங்கையில் சுற்றுலாத்துறை பாரிய வளர்ச்சி கண்டு வரும் நிலையில் அதனை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் பல்வேறு
நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

இந்நிலையில் சுற்றுலாத்துறையுடன் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் இந்த விடயத்தில் அக்கறை செலுத்த வேண்டும்
எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த அசௌகரியத்தை எதிர்கொண்ட Vmedia பணிப்பாளர் விமலச்சந்திரனும் இவ்வாறான சம்பவங்கள் குறித்து கவலை வெளியிட்டார்.

திருக்கோணேச்சரத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு யாசகர்கள் இடையூறு

Social Share

Leave a Reply