தேசிய கண் வைத்தியசாலையின் பதில் பணிப்பாளரை பதவி நீக்குமாறு கோரிக்கை  

தேசிய கண் வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர், பதவியிலிருந்து நீக்கப்படாவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 

இல்லையென்றால், இன்று(23.07) காலை 8 மணி முதல் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 

தேசிய கண் வைத்தியசாலையின் பதில் பணிப்பாளரின் ஏற்றுக் கொள்ள முடியாத செயற்பாடுகள் காரணமாக அவரை பதவி நீக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 

தேசிய கண் வைத்தியசாலையின் செயற்பாடுகளை சுமுகமாக முன் கொண்டு செல்வதற்கு பொருத்தமான ஒருவர் பணிப்பாளராக நியமிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

Social Share

Leave a Reply