மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதி 03 வயது குழந்தை உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று (12.10) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மூன்று வயது குழந்தை காயமடைந்த நிலையில் களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த மூவரும் களுத்துறை தெற்கு ரஜவத்த பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.