மலையக மக்களுக்கு இரண்டு காணிகள்

“எமது காணி, எமது உயிராகும்” என்ற தொனிப்பொருளில் இலங்கை மக்கள் காணி ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் கொழும்பு வெள்ளவத்தையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள், சமூக சேவையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


இந்த நிகழ்வில் கலந்து கொண்ட தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் மலையக மக்களுக்கு வீடு கட்டி வாழவும், வாழ்வாதாரத்துக்காக விளைநில வாழ்வாதார காணியும் என இரண்டு காணிகள் வழங்கப்படவேண்டுமென தெரிவித்தார்.

“முற்போக்கான இந்த செயற்பாட்டை செய்யும் , காணி உரிமைக்கான மக்கள் கூட்டணிக்கு தனது பாராட்டுகளை தெரிவித்த அதேவேளை தாம் முழுமையாக ஒத்துழைப்போம் எனவும் தெரிவித்தார்.

“இலங்கையில் காணி நில உரிமை பிரச்சினைதான் எல்லா பிரச்சினைகளுக்கும் மூலம்.”
“1964 சிறிமா சாஸ்திரி உடன்பாட்டில் இலங்கை இந்திய அரசுகள் மலையக மக்களை அரசியல்ரீதியாக பலவீனபடுத்தி விட்டன. ஆனாலும், இலங்கை குடியுரிமை பெற்ற மலையக மக்களுக்கு, ஏனைய இலங்கையருக்கு உள்ள அனைத்து உரிமைகளையும் வழங்க இலங்கை அரசு உடன்பட்டது. ஆனால், இன்று ஏனைய இலங்கையருக்கு உள்ள காணி உரிமை எங்களுக்கு மறுக்கப்படுகிறது.”

“வடகிழக்கில் 1958ன் பண்டா-செல்வா, 1965ன் டட்லி-செல்வா உடன்படிக்கைகளில் வழக்கு கிழக்கு மாவட்டங்களில் எப்படி காணி பிரித்து வழங்கப்பட வேண்டுமென விளக்கமாக கூறப்பட்டுள்ளது. ஆகவே, வடகிழக்கில் காணி வழங்கல் தொடர்பாக ஏற்றுக்கொள்ளப்பட்ட முறைமை உள்ளது.”

“1987ல், வந்த 13ம் திருத்தத்தில் காணி உரிமை தொடர்பாக கூறப்பட்டுள்ளது. ஆகவே இன்றைய அரசு தனது எதேச்சதிகார போக்கில் தமிழ் மக்களின் காணி உரிமைகளை மறுக்க முடியாது.”
நாம் எமது காணி நில உரிமைகளை பெற, பாதுகாக்க உறுதி பூண்டுள்ளோம்.””

எனவும் மனோ MP மேலும் தெரிவித்தார்.

மலையக மக்களுக்கு இரண்டு காணிகள்

Social Share

Leave a Reply