முல்லேரியா – உடஹமுல்ல பகுதியில் போதைப்பொருள் விற்பனையுடன் தொடர்புடைய ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பதில் பொலிஸ் மாஅதிபரின் ஆலோசனைக்கமைய முன்னெடுக்கப்பட்டுள்ள போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் போது குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரிடமிருந்து 2 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனை மூலம் பெறப்பட்டதாக கூறப்படும் 667,000 ரூபா பணம், கார், 3 தொலைபேசிகள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர் முல்லேரியாவைச் சேர்ந்த 41 வயதானவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
வௌிநாட்டிலுள்ள போதைப்பொருள் கடத்தற்காரர் ஒருவரினால் குறித்த சந்தேகநபர் வழிநடத்தப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கொழும்பு குற்றத்தடுப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.