
ஐக்கிய தேசியக் கட்சியுடன் கலந்துரையாடுவதற்காக கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவால் நியமிக்கப்பட்ட குழுவிலிருந்து தான் விலகுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, எதிர்வரும் செயற்குழு கூட்டத்தில் மேலும் ஒருமித்த கருத்து எட்டப்படும் வரை இந்தக் கலந்துரையாடல்களில் பங்கேற்கப் போவதில்லை என்று முடிவு செய்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.