கோலி சதம். இந்தியாவிற்கு வெற்றி.

கோலி சதம். இந்தியாவிற்கு வெற்றி.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் இன்று(23.02) சம்பியன்ஸ் கிண்ணத்தின் 5 ஆவது போட்டியாக துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா அணி 6 விக்கெட்களினால் வெற்றி பெற்று 2017 ஆம் ஆண்டு இறுதிப்போட்டிக்கு பழி தீர்த்தது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 49.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 241 ஓட்டங்களை பெற்றது. இதில் சவுத் ஷகீல் 62(76) ஓட்டங்களையும், மொஹமட் ரிஸ்வான் 46(77) ஓட்டங்களையும், குஷ்தில் ஷா 38(39) ஓட்டங்களையும் பெற்றனர். பாகிஸ்தான் அணி முதலிரு விக்கெட்களையும் இழந்து தடுமாறினர். 3 ஆவது விக்கெட் இணைப்பாட்டத்திற்காக ஜோடி சேர்ந்த சவுத் ஷகீல், மொஹமட் ரிஸ்வான் ஆகியோர் 104 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து அணியின் ஓட்ட எண்ணிக்கையினை உயர்த்தினர்.

இந்தியா அணியின் பந்துவீச்சில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்களையும், ஹார்டிக் பாண்டியா 2 விக்கெட்களையும், ஹர்ஷித் ராணா, அக்ஷர் படேல், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினர்.

துடுப்பாட்ட வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்பந்46
இமாம் உல் ஹக்Run OutRun Out102600
பாபர் அசாம்பிடி – KL ராகுல்ஹார்டிக் பாண்டியா232650
சவுத் ஷகீல்பிடி – அக்ஷர் படேல்ஹார்டிக் பாண்டியா627650
மொஹமட் ரிஸ்வான்Bowledஅக்ஷர் படேல்467730
சல்மான் அகாபிடி –  ரவீந்திரா ஜடேஜாகுல்தீப் யாதவ்192400
தய்யப் தஹிர்Bowledரவீந்திரா ஜடேஜா040600
குஷ்தில் ஷாபிடி –  விராத் கோலிஹர்ஷித் ராணா383902
ஷஹீன் ஷா அப்ரிடிL.B.Wகுல்தீப் யாதவ்000100
நசீம் ஷாபிடி –  விராத் கோலிகுல்தீப் யாதவ்141610
ஹரிஸ் ரவுப்Run outRun Out080701
அப்ரர் அஹமட்Not OutNot Out000000
       
Extras  17   
ஓவர்   49.4விக்கெட்  10மொத்த ஓட்டம்  241   
பந்துவீச்சாளர் ஓவர்ஓ.ஓவர்ஓட்டம்  விக்கெட்Economy
மொஹமட் ஷமி080043005.37
ஹர்ஷித் ராணா7.4030013.91
ஹார்டிக் பாண்டியா080031023.87
அக்ஷர் படேல்100049014.90
குல்தீப் யாதவ்090040034.44
ரவீந்திரா ஜடேஜா070040015.71

பதிலுக்கு துடுப்பாடிய இந்தியா அணி 42.3 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 244 ஓட்டங்களை பெற்றது. இதில் விராத் கோலி ஆட்டமிழக்கமால் 100(111) ஓட்டங்களையும், ஷ்ரேயாஸ் ஐயர் 56(67) ஓட்டங்களையும், ஷுப்மன் கில் 46(52) ஓட்டங்களையும் பெற்றனர். இது விராத் கோலியின் 51 ஆவது ஒரு நாள் சர்வதேச சதமாகும்.

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் ஷஹீன் ஷா அப்ரிடி 2 விக்கெட்களையும், அப்ரர் அஹமட், குஷ்தில் ஷா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினர்.

துடுப்பாட்ட வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்பந்46
ரோஹித் ஷர்மா Bowledஷஹீன் ஷா அப்ரிடி201531
ஷுப்மன் கில்  Bowledஅப்ரர் அஹமட்465270
விராட் கோலி Not OutNot Out10011170
ஷ்ரேயாஸ் ஐயர் பிடி –  இமாம் உல் ஹக்குஷ்தில் ஷா566751
ஹார்டிக் பாண்டியா பிடி – மொஹமட் ரிஸ்வான்ஷஹீன் ஷா அப்ரிடி080610
அக்ஷர் படேல் Not OutNot Out030400
KL ராஹுல்       
ரவீந்திர ஜடேஜா       
குல்தீப் யாதவ்       
மொஹமட் ஷமி        
ஹர்ஷித் ராணா      
       
Extras  3   
ஓவர்  46.3விக்கெட்  4மொத்த ஓட்டம்  231   
பந்துவீச்சாளர் ஓவர்ஓ.ஓவர்ஓட்டம்  விக்கெட்Economy
ஷஹீன் ஷா அப்ரிடி080074029.25
நசீம் ஷா080037004.62
ஹரிஸ் ரவுப்070052007.42
அப்ரர் அஹமட்100028012.80
குஷ்தில் ஷா7.30043015.73
சல்மான் அகா020010005.00

Social Share

Leave a Reply