பாணந்துறையில் துப்பாக்கிச் சூடு

பாணந்துறை வைத்தியசாலை ஒன்றுக்கு முன்னால் இன்று (27/01) காலை இனந்தெரியாத குழுவினரால் அம்பியூலன்ஸ் வாகன சாரதி மீது துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த இனந்தெரியாத நபர்கள் தப்பித்துச் சென்றுள்ளதாக பொலிஸாா் தெரிவித்துள்ளனா்.

அம்பியூலன்ஸ் வாகனம் மீது தொடர் துப்பாக்கி பிரயோகம் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், அம்பியூலன்ஸ் சாரதிக்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என பொலிஸாா் மேலும் தெரிவித்துள்ளனர்.

இரு மோட்டாா் சைக்கிள்களில் வந்த நால்வரே இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை நடாத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனா்.இதனை தொடர்ந்து பொலிஸார் தீவிர விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version