பாராளுமன்ற அமர்வுகள் இடம்பெறும் திகதி அறிவிப்பு

பாராளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 8ஆம் திகதியிலிருந்து 11ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக, பாராளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்துள்ளாா்.

கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான தெரிவுக்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பாராளுன்ற ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி,விசேட பொருட்கள் மற்றும் சேவை வரி மசோதாவின் இரண்டாம் வாசிப்பு பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இதேவேளை, பெப்ரவரி 11ஆம் திகதி மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற அமர்வுகள் இடம்பெறும் திகதி அறிவிப்பு
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version