வவுனியா, பூவரசன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள் புதுக்குளம் பகுதியில் பேரூந்து , மோட்டார் சைக்கிள் விபத்தில் தகப்பனும் மகனும் உயிரிழந்துள்ளனர். மன்னாரில் இருந்து, வவுனியா நோக்கி பயணித்த பேரூந்து, பிரதான வீதிக்குள் நுழைந்த மோட்டார் சைக்கிளினை மோதியுள்ளது.
இந்த விபத்தில் 35 வயதான தகப்பனும், 8 வயதானா மகனும் உயிரிழந்துள்ளனர். சம்பவம் நடத்தில் ஒன்று கூடிய கிராம மக்கள் பெருந்திணை தாக்கி சேதப்படுத்தியுள்ளனர். இதன் காரணமாக குறித்த பகுதில் பதட்டமான சூழ்நிலை காணப்பட்டுளது.
சம்பவ இடத்திற்கு பொலிஸாரும், விசேட அதிரடிப்படையினரும் அழைக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஒரு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள அதேவேளை,மற்றவர் வவுனியா பொது வைத்தியசாலைக்கு எடுத்து செல்லும் போது உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.