குருநாகல், புதிய பிரதமர் ஒருங்கிணைப்பு அலுவலகத்துக்கு பிரதமர் விஜயம்

இல.462, புத்தளம் வீதி, யந்தம்பலாவ, குருநாகல் எனும் விலாசத்தில் புதிதாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள குருநாகல் பிரதமர் ஒருங்கிணைப்பு அலுவலகத்திற்கு நேற்று (05.03) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விஜயம் செய்து அலுவலக செயற்பாடுகளை பார்வையிட்டதாக பிரதமர் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

பிரதமரின் இந்த விஜயத்தின் போது குருநாகல் மாவட்ட மக்கள் பிரதிநிதிகளுடனான சந்திப்பொன்றும் இடம்பெற்றது. சந்திப்பில் குருநாகல் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பெருந்தெருக்கள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, இராஜாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபை தவிசாளர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

குருநாகல் மாவட்டத்தில் தற்போது செயற்படுத்தப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்திய கௌரவ பிரதமர், கிராமத்திற்கு தொடர்பாடல் வேலைத்திட்டத்தின் கீழ் குருநாகலில் நிர்மாணிக்கப்படும் 48 தொடர்பாடல் கோபுரங்கள் குறித்தும் இதன்போது மக்கள் பிரதிநிதிகளிடம் கேட்டறிந்து கொண்டார்.

குறித்த செயற்பாடுகளை மேலும் செயற்திறன் மிக்கதாக்குவது தொடர்பில் கவனம் செலுத்திய கௌரவ பிரதமர், இக்கலந்துரையாடலின் போது விடயத்திற்கு பொறுப்பான அiமைச்சரான கௌரவ நாமல் ராஜபக்ஷ அவர்களை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு கோபுரங்களை நிர்மாணிக்கும் பணிகளை துரிதப்படுத்துமாறு ஆலோசனை வழங்கினார்.

குருநாகல், புதிய பிரதமர் ஒருங்கிணைப்பு அலுவலகத்துக்கு பிரதமர் விஜயம்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version