ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்குமிடையில் 08 ஆம் திகதி சந்திப்பு ஒன்று நடைபெறவுள்ளதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையின் தற்போதைய பொருளாதர சிக்கலுக்கான தீர்வு வரைபு ஒன்றினை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஜனாதிபதிக்கு வழங்கியிருந்தது. அது தொடர்பில் கலந்துரையாடவே இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று(05.03) ஜனாதிபதிக்கும் அரச பங்காளி கட்சிகளுடனான கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் குறித்த வரைபு தொடர்பில் பேசப்பட்டு அது தொடர்பில் கலந்துரையாடுவது எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் 08 ஆம் திகதி கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேற்றைய கூட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிரிசேன, இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, துமிந்த திஸநாயக்க, லசந்த அழகியவண்ண, அமைச்சர் வாசுதேவ நாணயக்கார ஆகியோருடன் அண்மையில் அமைச்சு பதவிகளிலிருந்து விலக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோரும் ஜனாதிபதியுடனான கூட்டத்தில் கலந்து கொண்டனர்.