மின்தடை அறிவிப்பு

நாளைய தினம்(07.03) மின்தடை அமுல் செய்யப்படவுள்ள இடங்களும், நேரமும் பொது சேவைகள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

பல பகுதிகளில் மின்தடைக்கான நேரம் குறைக்கப்பட்டுள்ளது. சில பகுதிகளில் 7 1/2 மணி நேர மின் தடை நாளையதினம் அமுல்படுத்தப்படவுள்ளது.

குழுக்கள் E மற்றும் F ஆகிய இடங்களில் 7 1/2 மணி நேரம் தடை செய்யப்படவுள்ளது. காலை 8 மணி முதல் மாலை 06 மணிவரையான நேரப்பகுதியில் 5 மணி நேரமும், மலை 06 மணி முதல் இரவு 11 மணி வரையான நேரப்பகுதியில் 2 1/2 மணி நேரமும் மின்தடை செய்யப்படவுள்ளது.

P, Q, R, S, T, U, V மற்றும் W பகுதிகள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரையான நேரப்பகுதியில் 3 மணி நேரமும் மின் தடை செய்யப்படவுள்ளது. 9 மணி முதல் மாலை 5 மணி வரையான நேரப்பகுதியில் 2 மணித்தியாலங்களும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையான நேரப்பகுதியில் 1 மணி நேரமும் இந்த பகுதிகளில் தடை செய்யப்படவுள்ளது.

ஐந்தாம் திகதிக்கு பின்னர் மின் தடை செய்யப்படாது என அண்மையில் ஜனாதிபதியுடனான கூட்டத்தில், மின்சாரசபை உயர் அதிகாரிகள் ஜனாதிபதிக்கு தெரிவித்திருந்தனர். ஆனாலும் மின் தடை தொடர்கிறது.

மின்தடை அறிவிப்பு
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version