தேசிய அரசாங்கம், வதந்தி

தேசிய அரசாங்கம் அமைக்கும் திட்டம் ஒன்று பேசப்பட்டு வருவதாகவும், பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விசக்ரமசிங்க அதன் பிரதமராக பொறுப்பேற்கவுள்ளார் என வெளிவரும் செய்திகள் உண்மையல்லவென ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் மறுத்துள்ளனர்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் அவ்வாறான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவில்லை எனவும், அதற்கான வாய்ப்புகள் இல்லையெனவும் ரணில் விக்ரமசிங்கவிற்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தேசிய அரசாங்கம் அமைப்பதற்கு பதிலாக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான கொள்கை ஒன்றை வகுத்து அடுத்த 15 வருடங்களுக்கு செயற்படுத்தும் திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டுமெனவும், சர்வதேச நாணய நிதியத்தின் உதவியினை பெற்று நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டுமெனவும் ரணில் விசக்ரமசிங்க தனது ஆலோசனையினை வழங்கியுள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவோடு தனிப்பட்ட நட்பின் அடிப்படையில் நாட்டின் தற்போதைய சூழ்நிலை தொடர்பில் ரணில் விசக்ரமசிங்க MP கலந்துரையாடியதாகவும், அதில் அரசமைப்பது தொடபிரில் எந்தவித பேச்சுகளும் இடம்பெறவில்லை எனவும் அது ஒரு தனிப்பட்ட கலந்துரையாடல் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய அரசாங்கம், வதந்தி
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version