டொலர் பற்றாக்குறையால் சுமார் 2500 கன்டெய்னர்களில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் துறைமுகத்தில் தேங்கிக்கிடப்பதாக அத்தியாவசிய உணவுப்பொருட்கள் இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
டொலர் பற்றாக்குறையால் அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சங்கம் ஒன்றின்பேச்சாளர்தெரிவித்தார்.
சீனி, கோதுமை மா, செத்தல்மிளகாய், பருப்பு, இஞ்சி, கொத்தமல்லி போன்ற பல பொருட்கள் கொழும்பு துறைமுகத்தில் தேங்கிக்கிடப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த காலங்களில் அவ்வப்போது டொலர்கள் பெறப்பட்டாலும் தற்போது வங்கிகள் டொலர்களை வபெறமுடியாத நிலை ஏற்பட்டுளளதனால் பொருட்களுக்கான பணத்தினை வழங்கி இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
