பங்கு சந்தை இன்று எழுச்சி

கொழும்பு பங்கு சந்தை இன்று பெரியளவிலான எழுச்சி ஒன்றை காண்பித்துள்ளது. 1 மாத காலத்துக்கும் மேலாக வீழ்ச்சியடைந்திருந்த பங்குசந்தை இன்று 6.81 சதவீத முன்னேற்றம் அடைந்துள்ளது.
பங்குசந்தையின் சுட்டெண் 692.35 புள்ளிகளினால் அதிகரித்தது. அதன்படி மொத்த விலைச்சுட்டி 10.938 இல் இன்றைய தினம் நிறைவடைந்தது.

கடந்த டிசம்பர் மாதம் இறுதி வாரத்தில் 12 புள்ளியைனை தொட்ட பங்கு சந்தை, ஜனவரி முதல் வாரம் 13 புள்ளிகளை தொட்டு இலங்கை பங்கு சந்தை வரலாற்றில் முதற் தடவையாக 13 புள்ளியினை தொட்டது.

அதன் பின்னர் தொடந்து வீழ்ச்சியடைந்து சென்ற பங்குசந்தை நேற்றைய தினம் 10 புள்ளிகளை விட குறைவடையலாம் என்ற நிலையிலிருந்தது. ஆனாலும் இன்றைய தினம் சடுதியான முன்னேற்றத்தின் மூலம் 11 புள்ளிகளை அண்மித்துள்ளது. இன்றைய தினத்துக்கான முன்னேற்றம் கடந்த இரண்டு மாதங்களில் ஏற்பட்ட முன்னேற்றம் என்பது சுட்டிக்காட்டாத்தக்கது.

டொலர் பெறுமதி அதிகரிக்கப்பட்டது பங்கு சந்தை முன்னேற்றத்துக்கு காரணமாக இருக்கலாமென நம்பப்படுகிறது.

பங்கு சந்தை இன்று எழுச்சி
Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version