நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவதற்க்கான நடவடிக்கையில் ஐக்கிய மக்கள் சக்தி களமிறங்கியுள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்கவை மேற்கோள் காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுளள்து.
கட்சிக்குள் இந்த விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடல் நடைபெற்று வருவதாகவும், மேலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் செயற்குழு உறுப்பினர்களுடன் கலந்துரையாடி இறுதி முடிவெடுக்கபபடவுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் நிதி நெருக்கடி, நிதி பாதுகாப்பு தொடர்பில் எந்த முடிவினையும் அறிவிக்காமை, நாட்டின் பொருளாதார நிலைமைகள் தொடர்பில் பாராளுமன்றத்துக்கு அறிவிக்காமை மற்றும் பதிலளிக்க தவறியமை ஆகிய காரணங்களுக்கு நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்படவுள்ளதாக திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ கடந்த தேர்தலில் போட்டியிட்டிருக்கவில்லை. தேசிய பட்டியில் மூலம் பாராளுமன்றத்துக்கு இடைநடுவில் உள்வாங்க்கப்பட்டவர், பின்னர் நிதியமைச்சராகவும் நியமிக்கபப்ட்டார்.
