களனி பாலத்துக்கு இணைக்கும் துறைமுக நகருக்கான அதிகவேக வீதி புனரமைப்பு பணிகளை வேகப்படுத்துமாறு பெருந்தெருக்கள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அந்த திட்டத்துக்கான அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு வருடங்களில் 7 சதவீதமான பணிகளே நிறைவடைந்துள்ளதாக கூறிய ஜோன்சடன் பெர்னாண்டோ 2023 ஆம் ஆண்டு இந்த வீதியினை மக்கள் பாவனைக்கு வழங்குவதற்கு ஏற்ற வகையில் வேகப்படுத்தி நிறைவு செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
5.3 KM தூரமுள்ள இந்த வீதி காலி முக திடல், துறைமுக நகர், புறக்கோட்டை, அளுத்மாவத்தை, இன்குராங்கொட சந்தி ஆகிய இடங்களில் உட்செல்ல கூடியவாறு அமைக்கப்பட்டு வருகிறது.
கொழும்பு துறைமுகத்தின் உள்பகுதியினூடாக பறக்கும் வீதியாக இந்த வீதி 28002 மில்லியன் ரூபா பெறுமதியில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த வீதி அமைக்கப்படுவதன் மூலம் போக்குவரத்து மிக வேகப்படுத்தப்படும்.
அமைச்சின் தரவுகளின் படி தற்போது 45 நிமிடங்கள் எடுக்கும் பயணம் 5 நிமிடங்களுக்கு குறைக்கப்படுமென ஊகம் வெளியிடப்பட்டுள்ளது. கொழும்புக்குள் உள் நுழைபவர்களுக்கான பயணம் மேலும் துரிதப்படுத்தப்படும் அதேவேளை வேகப்படுத்தப்படும்.