சர்வக கட்சி மாநாடு ஆரம்பித்தது

ஜனாதிபத்தி கோட்டாபய ராஜபக்ஷவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சர்வ கட்சி மாநாடு ஜனாதிபதி செயலகத்தில் சற்று முன்னர் ஆரம்பித்துள்ளது. நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்யும் சகல கட்சிகளும் இணைந்து செயற்பட்டு இந்த நாட்டை மீள கட்டியெழுப்புதல் எனும் திட்டத்தின் கீழ் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஜனாதிபதியினை சந்தித்த பின்னர் இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த மாநாட்டுக்கு ஆளும் பொதுஜன பெரமுனவின் கட்சிகள் சார்பாக விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார ஆகியோரது கட்சிகள் பங்குபற்றவில்லை. ஆளும் கட்சியின் தமிழ் பங்காளி கட்சியான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை.

எதிர்கட்சியிலுள்ள தமிழரசுக் கட்சி, புளொட் ஆகிய தமிழ் கட்சிகள் இன்றைய மாநாட்டில் கலந்துகொண்டுள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தியி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இந்த மாநாட்டை புறக்கணித்துள்ளன. தமிழ் முற்போக்கு கூட்டணி, முஸ்லிம் கட்சிகளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை.

இன்றைய இந்த மாநாடு தொடர்பில் இலங்கையிலும், சர்வதேச ரீதியிலும் எதிர்பார்க்கப்படும் அதேவேளை உன்னிப்பாக அவதானித்து வருகின்றனர். ஏதேனும் முன்னேற்றம், மாற்றங்கள் ஏற்படுமென எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

இலங்கை மக்கள் மிக மோசமாக பொருளாதாரத்தினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மாநாட்டின் மூலம் ஏதும் ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பே உருவாகியிருக்கிறது.

இந்த மாநாடு வெறும் கண்துடைப்பு எனவும், அரசியல் நாடகம் எனவும் அரசாங்கத்துக்கு எதிரானவர்கள் கருத்து வெளியிட்டு வரும் நிலையில், அது உண்மையாகுமா? பொய்க்குமா என்பது மாநாடு நிறைவடைந்த பின்னரே தெளிவாகும்.

ஆளும் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவுகளையும் நெருக்கடிகளையும், களையும் முகமாகவும், தாம் ஒன்றாக உள்ளோம் என்பதனையும் காட்டும் முகமாக இந்த மாநாடு அமையுமாயின் இந்த மாநாடு மக்களுக்கு பிரியோசனமற்ற ஒன்றாகிவிடும்.

சர்வக கட்சி மாநாடு ஆரம்பித்தது
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version