ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் நாளை(25.04) சுகயீன லீவு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அகில இலங்கை அதிபர், ஆசிரியர், ஆசிரிய ஆலோசகர் சங்கம் அறிவித்துள்ளது. நாட்டில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோருக்கு ஏற்பட்டுள்ள அசாதரண சூழ்நிலையினை தீர்க்குமாறு கோரி இந்த சுகயீன லீவு போராட்டத்தில் ஈடுப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
எரிபொருள் தட்டுப்பாடு, போக்குவரத்து கட்டணங்கள் அதிகரிப்பு காரணமாக அண்மையிலுள்ள பாடசாலையில் ஆசிரியர்கள் கடமையாற்ற கோரிக்கை விடுத்த போதும், கல்வியமைச்சின் செயலாளர் அதனை மறுத்துள்ளார் என ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசெப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் உடனடியாக இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கையினை முன் வைத்து இந்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ஜோசெப் ஸ்டாலின் மேலும் தெரிவித்துள்ளார்.
தேசிய அதிபர் சங்கமும் நாளைய தினம் கடமைக்கு செல்லப்போவதில்லையென அறிவித்துள்ளது.