கொழும்பில் இன்று பாவிக்கப்பட்டிருந்த வீதி தடைகளுக்கு கூரிய கம்பிகள் அமைக்கப்பட்டிருந்தன. இவ்வாறு அமைக்கப்பட்ட கம்பிகள் போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு பாரிய ஆபத்துகளை ஏற்படுத்தும் வாய்ப்புகளுள்ளன. அவ்வாறான தடடைகள் யாருக்கும் தெரியாத வகையில் கருப்பு துணிகளினால் மூடப்பட்டிருந்தன. அதில் மோதுண்டால் பாரிய காயங்கள் ஏற்படும் நிலையில் கூரிய கம்பிகள் அமைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் இலங்கை வழக்கறிஞர்கள் சங்கம் இந்த நடவடிக்கைக்கு தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. அத்தோடு கொழும்பில் வீதிகள் முழுமையாக மூடப்பட்டமைக்கும் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். போராட்ட காரர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் எந்தவித நடவடிக்கையினையும் ஏற்றுக் கொள்ள முடியாது. எந்தவித வன்முறையினையும் அனுமதிக்க முடியாயது. போராட்டத்தில் ஈடுபட அனைவருக்கும் உரிமை உண்டு. அதனை யாரும் தடுக்க முடியாது.
ஆகவே மக்களினதும், போராட்ட காரர்களினதும் உரிமைகளையும், பாதுகாப்பையும் உறுதி செய்யுமாறு அரசாங்கம், பொலிலிஸ் மா அதிபர், ஆயுத படைகள் உட்பட அனைவரிடம் கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ள இலங்கை வழக்கறிஞர் சங்கம், அனைத்து சூழ்நிலைகளிலும் கட்டுப்பாட்டுடனும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் முகமாகவும் செயல்படுமாறு அறிவுறுத்தியுள்ளனர். இல்லாவிடின் நாட்டுக்கு பாரிய பின் விளைவுகள் ஏற்படுமெனவும் அந்த சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.