சீனா ஒரு கப்பல் டீசலினை இலங்கைக்கு வழங்க முன்வந்திருக்கும் நிலையில் இலங்கை சார்பாக எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை அல்லது பதிலளிக்கவில்லை என ஊடகமொன்று தமக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் சிக்கல் நிலைக்கு கைகொடுக்கும் முகமாக சீனா இந்த உதவியினை வழங்க முன்வந்துள்ளது. டீசல் இலங்கையில் போதிளவு இருப்பதாக பிரதமர் மற்றும் வலுசக்தி அமைச்சர் ஆகியோர் தெரிவித்திருந்தார்கள். அதற்காக கிடைக்கும் டீசலினை பெற்றுக் கொள்ளாமல் விட முடியாது.
பெற்றோல் இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. வலுசகதி அமைச்சர் காஞ்சன விஜயசேகர இதனை உறுதி செய்துள்ளார். கொழும்பின் சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நேற்றும் பெற்றோல் வழங்கப்பட்டது. இன்றும்(19.05) சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல் விநியோகம் செய்யப்படுகிறது.