பெற்றோல் விநியோகம் இன்னமும் இரண்டு தினங்களில் ஆரம்பிக்குமென வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர பாராளுமன்றத்தில் இன்று(19.05) தெரிவித்துள்ளார்.
பெற்றோலுக்கான கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் இன்று காலை 8.30 இற்கு கப்பல் வந்தடைந்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
வருகை தந்துள்ள பெற்றோல் இறக்கப்பட்டு அவை சகல பெற்றோல் நிலையங்களுக்கும் விநியோகிக்க இரண்டு தினங்கள் மேலும் தேவைப்படுமென அவர் தெரிவித்துள்ளார். பெற்றோல் இறக்கப்பட்டதும் உடனடியாக விநியோகம் ஆரம்பிக்கும் என வலுசக்தி அமைச்சர் மேலும் அறிவித்துள்ளார்.
இதேவேளை இரண்டு கப்பல்களில் பெற்றோல் வருகை தந்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க உறுதி செய்துள்ளார். உடனடியாக வரிசையினை குறைக்க முடியுமே தவிர முற்று முழுதாக இல்லாமல் செய்ய முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜூன் மாதம் நடுப்பகுதி வரை எரிபொருளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.
