பிரதமர் ரணில் விக்ரமசிங்க நிதியமைச்சர் பொறுப்பினை ஏற்றுள்ளார். இன்று(25.05) காலை 10.30 மணிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் அவர் தனது பதவிக்கான கடிதத்தை பெற்றுக் கொண்டுள்ளார்.
பொருளாதர சிக்கல்கள் நிலவும் நிலையில் இதுவரை காலமும் நிதியமைச்சு பதவி யாருக்கும் வழங்கப்பட்டிருக்கவில்லை. நாட்டின் பொருளாதர சிக்கல்களை தீர்த்து வைக்க ஜனாதிபதியின் கோரிக்கை அமைய தான் பிரதமர் பதவியினை ஏற்றுக் கொண்டதாக அறிவித்திருந்த ரணில், முக்கிய பதவியான நிதியமைச்சு பதவியினையும் தற்போது தானே ஏற்றுக் கொண்டுள்ளார்.
நிதியமைச்சு, பொருளாதர ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய கொள்கைகள் ஆகிய அமைச்சுக்களை அவர் பெற்றுள்ளார்.
