உலக வங்கி இலங்கைக்கு உடனடியான கடன்களை வழங்குவதில்லை என முடிவெடுத்துள்ளதாக அறிவித்துள்ளது. உலக வங்கி இலங்கைக்கு கடன்களை வழங்கவுள்ளது என ஊடங்களில் வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை எனவும் மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை சரியான, நிலையான பொருளாதரா கொள்கைகளை வெளியிடும் வரை எந்தவித புதிய கடன்களும் இலங்கைக்கு வழங்கப்படாது எனவும், ஏற்கனவே இலங்கை மக்களுக்கு கைகொடுப்பதற்காக சம்மதம் தெரிவித்த அடிப்படை தேவைகள் மற்றும் மருத்துவ தேவைகளுக்கான கடன்கள் மட்டுமே வழங்கப்படுமெனவும் உலக வங்கி அறிவித்துள்ளது.
சர்வதே நாணய நிதியம், மற்றைய அமைப்புகளுடன் இணைந்து இலங்கையின் முன்னேற்றம் தொடர்பில் உலக வங்கி அவதானித்து வருவதாகவும், அதனடிப்படையில் இலங்கையில் பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டால் மட்டுமே இலங்கைக்கு கடன் வழங்குவது தொடர்பில் யோசிக்க முடியும் எனவும் இப்போதைக்கு கடன் வழங்குதல் பற்றி சிந்திக்க கூட முடியாதெனவும் உலக வங்கி அறிவித்துள்ளது.
