இலங்கை மோசமான காலகட்டத்த்தில், பொருளாதர நிலையில் காணப்படுகிறது. இவ்வாறான நிலையில் பண உதவிகள், மருத்துவ உதவிகள், எரிபொருள், உணவு உதவிகளோடு அத்தியாவசிய உதவிகள் அனைத்தையும் இந்தியா இலங்கைக்கு செய்து வருகிறது. அத்தோடு சர்வதேச அமைப்புகளிடமும் இலங்கைக்கு உதவி செய்யுமாறு இந்தியா அழுத்தமாக கூறி வருகிறது என இந்தியாவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்திய அரசாங்கத்தினதும், நிறுவனங்களினதும், மக்களனிதும், தனி நபர்களது உதவிகள் மூலமும் தொடர்ந்தும் இலங்கையிலுள்ள சகோதர சகோதரிகளுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த உதவிகளில் இலங்கையின் வடக்கு, கிழக்கு தமிழர்கள் மற்றும் மலையக தமிழ் மக்கள், உள்ளடங்கலாக சகலருக்கும் உதவிகள் வழங்கப்படுகின்றன என உரையாற்றிய இந்திய பிரதமர் மோடி கூறிய அதேவேளை கடினமான இந்த காலத்தில் அனைத்து விதத்திலும் இந்தியா இலங்கைக்கான உதவிகளை செய்து வருகிறது எனவும் கூறினார்.
இந்தியா, இலங்கை நாட்டு மக்களோடும், இலங்கை ஜனாநாயகத்தோடும், இலங்கையின் இஸ்திரத்தன்மை, பொருளாதர அபிவிருத்திகளிலும் எப்போதும் உறுதுணையாக நிற்குமெனவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மேலும் மக்கள் முன்னிலையில் உரையாற்றினார்.
