ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹான வீட்டின் முன்னாள் நடைபெற்ற ஆர்ப்பாட்ட சம்பவம் மற்றும் தாக்குதல், காலி முகத்திடல், அலரி மாளிகை முன்றலில் நடைபெற்ற தாக்குதல்கள் அதன் பின்னர் தொடர்ச்சியாக நடைபெற்ற கலவரங்கள் தொடர்பில் விசாரித்து அறிக்கையிடுவதற்கான குழு ஒன்று ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வு பிரிவு மற்றும் முப்படையினரினால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளில் குறைபாடுகள் காணப்படுகின்றனவா என்பது தொடர்பிலும், நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பிலும் விசாரணைகளை மேற்கொண்டு ஜனாதிபதிக்கு அறிக்கையிட இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் இராணுவ தளபதி தயா ரத்நாயக்க, முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட, முன்னாள் வான்படை தளபதி எயார் மார்ஷல் ரொஷான் குணதிலக ஆகியோர் இந்த குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
