இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாளான இன்றைய(26.05) நிறைவில் இலங்கை அணி பலமான நிலையில் காணப்படுகிறது.
அஞ்சலோ மத்தியூஸ் மற்றும் டினேஷ் சந்திமால் ஆகியோர் சதமடித்து இலங்கை அணியின் ஓட்ட எண்ணிக்கையினை உயர்த்தியமையினால் சிறப்பான ஓட்ட எண்ணிக்கையான 506 இனை பெற்றுக் கொண்டது.
பங்களாதேஷ் அணியின் இரண்டாம் இன்னிங்சில் முதல் நான்கு விக்கெட்களை இலங்கை அணி கைப்பற்றியுள்ளமையினால் வெற்றி பெறும் நிலை காணப்படுகிறது.
மத்தியூஸ் சந்திமால் ஆகியோர் ஆறாவது விக்கெட் இணைப்பாட்டமாக 199 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டனர். இதில் மத்தியூஸ் 145 ஓட்டங்களையும், சந்திமால் 124 ஒட்டங்களையும் பெற்றனர். அணித்தலைவர் டிமுத் கருணாரட்ன 80 ஓட்டங்களையும், தனஞ்சய டி சில்வா 58, ஒசாத பெர்னாண்டோ 57 ஓட்டங்களையும் பெற்றனர்.
பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில் ஷகிப் அல் ஹசன் 5 விக்கெட்களையும், எபடொட் ஹொசைன் 4 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.
பங்களாதேஷ் அணி முதல் இன்னிங்சில் 365 ஓட்டங்களை பெற்றது. பங்களாதேஷ் அணி இரண்டாம் இன்னிங்ஸ் போன்றே வேகமாக விக்கெட்களை இழக்க தற்போது இரண்டாம் இன்னிங்சில் காணப்படும் முஸ்ஃபிகீர் ரஹீம், லிட்டன் டாஸ் ஜோடி 272 ஓட்டங்களை பகிர்ந்து அணியினை காப்பாற்றியது. முஸ்ஃபிகீர் ரஹீம் ஆட்டமிழக்கமால் 175 ஓட்டங்களையும், லிட்டன் டாஸ் 141 ஒட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் கஸூன் ரஜித்த 5 விக்கெட்களையும், அஷித பெர்னாண்டோ 4 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.
பங்களாதேஷ் அணி இரண்டாம் இன்னிங்சில் 34 ஓட்டங்களை பெற்று 4 விக்கெட்களை இழந்து 107 ஓட்டங்களினால் பின்னிலையில் காணப்படுகிறது. பந்துவீச்சில் அஷித பெர்னாண்டோ 2 விக்கெட்களையும், கஸூன் ரஜித ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றியுள்ளார்கள்.
