ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை உடனடியாக பதவி விலக கோருகிறார்கள். அப்படி அவர் பதவி விலகி பிரச்சினைகள் தீர்ந்தால் பசில் ராஜபக்ஷ ஜனாதிபதியாவர் என சட்டம் மற்றும் சட்ட சீர்திருத்த அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ கருத்து தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் பசில் ராஜபக்ஷவின் கட்டுப்பாட்டிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவே பெரும்பான்மையினை கொண்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகினால் பாராளுமன்றம் ஜனாதிபதியினை நியமிக்கும். ஆகவே பெரும்பான்மையினை கொண்டுள்ள கட்சி, பசில் ராஜபக்ஷவை நியமிக்குமென அமைச்சர் விஜதாஸ ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.