IPL 2022 ஆம் ஆண்டுக்கான இறுதிப் போட்டி ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் குஜராத் டைடன்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் 07 விக்கெட்களினால் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்று சம்பியனாக மகுடம் சூடியது.
131 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 18.1 ஓவர்களில் 03 விக்கெட்களை இழந்து 133 ஓட்டங்களை பெற்றது. இதில் சுப்மன் கில் ஆட்டமிழக்காமல் 45(43)ஓட்டங்களையும், ஹார்டிக் பாண்ட்யா 34(30) ஓட்டங்களையும், டேவிட் மில்லர் ஆட்டமிழக்காமல் 32(19) ஓட்டங்களையும் பெற்றனர்.
ராஜஸ்தான் ரோயலஸ் அணி சார்பாக பந்துவீச்சில் யுஸ்வேந்திரா செகால், பிரசித் கிருஷ்ணா, ரென்ட் போல்ட் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.
யுஸ்வேந்திரா செகால் கைப்பற்றிய இந்த விக்கெட்டின் மூலமாக தொடரின் கூடுதலான விக்கெட்களை கைப்பற்றியவராக மாறினார்.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.
ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 20 ஓவர்களில் 09 விக்கெட்களை இழந்து 130 ஓட்டங்களை பெற்றது. இதில் ஜோஸ் பட்லர் 39(35) ஓட்டங்களையும், ஜஸஸ்வி ஜய்சவால் 22(16) ஓட்டங்களையும், ரியன் பராக் 15(14) ஓட்டங்களையும், சஞ்சு சம்சன் 14(11) ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் ஹார்டிக் பாண்ட்யா 03 விக்கெட்களையும்(4 -17), சாய் கிஷோர் 2 விக்கெட்களையும், யஸ் தயால், மொஹமட் ஷமி, ரஷீட் கான் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.
ராஜஸ்தன் ரோயல்ஸ் அணி 2008 ஆம் ஆண்டு முதல் IPL தொடரில் வெற்றி பெற்றதன் பின்னர் இந்த வருடமே இறுதிப் போட்டிக்கு தெரிவாகியிருந்தது.
குஜராத் டைடன்ஸ் அணி இம்முறையே முதல் தடவையாக IPL தொடரில் களமிறங்கி குழு நிலையில் முதலிடத்தை பெற்று, இறுதிப் போட்டியில் சம்பியனாக மகுடம் சூட்டியுள்ளது, குஜராத் அணி 2016 ஆண்டு IPL தொடரில் குஜராத் லயன்ஸ் எனும் பெயரில் விளையாடியிருந்தது.