களுத்துறை, பேருவளை பகுதியில் 42 வயதான ஆண் ஒருவர் இனந்தெரியாதவரினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இளநீர் சேகரிக்கும் ஒருவரே இவ்வாறு துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.
கொழும்பு, மருதானை மற்றும் பேருவளை ஆகிய இடங்களை வசிப்பிடமாக கொண்ட இவர், பட்டா ரக வாகனத்தில் பயணித்த வேளையில் துப்பாக்கி முனையில் இறக்கப்பட்டு சுடப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
